மருந்துச்செடி வகைகளில் வல்லாரை முக்கிய இடம் வகிக்கின்றது.
இதன் தாயகம் இந்தியா, சீனா, இந்தோனேஷியா, மடகாஸ்கர் மற்றும் ஆப்பிரிக்கா ஆகும்.
இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் சமையல் மூலிகையாகவும், சட்னி, ஊறுகாய், புத்துணர்வு பானம் தயாரிக்கப் பயன்படுகிறது.
எப்படி பயிரிடுவது…?
இரகங்கள்
சமவெளி வல்லாரை – வெளிர்ப் பச்சை நிற இலைகளுடையது. மலைப்பகுதி வல்லாரை கரும்பச்சை இலைகளுடையது.
பருவம்
அக்டோபர் மாதம் சாகுபடி செய்ய சிறந்த பருவம் ஆகும். வல்லாரையானது மிதமான காலநிலை மற்றும் நிழலான பகுதிகளில் நன்கு வளரும். 50 சதவிகிதம் நிழலில் அதிகமாக வளரும் மற்றும் மகசூல் அதிகமாக கிடைக்கும்.
மண்
ஈரப்பதமான சதுப்பு நிலம் மற்றும் நீர் நிலைகளைச் சுற்றி நன்கு வளரும். அமில மண் மற்றும் உவர் மண்ணில் வளரும் தன்மை கொண்டது. ஈரத் தன்மையுள்ள, அங்கக தன்மை கொண்ட களிமண்ணில் நன்கு வளரும்.
நிலம் தயாரித்தல்
சாகுபடிக்கு தேர்வு செய்த நிலத்தில் எக்டருக்கு 5 டன் தொழுவுரத்தை அடியுரமாக அளித்து நிலத்தை நன்கு உழவு செய்ய வேண்டும்.
விதையளவு
கணுக்கள் கொண்ட தண்டுத் துண்டுகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. ஒரு எக்டருக்கு 1,00,000 எண்ணிக்கை தாவரங்கள் தேவைப்படும்.
நாற்றங்கால் தயாரித்தல்
தேவையான அளவு படுக்கைகளை அமைத்து நடவு செய்ய வேண்டும். வேர்கள் நன்கு பிடிப்பதற்காக பாசனம் செய்ய வேண்டும்.
விதைத்தல்
இவற்றை நேரடியாக வயலில் விதைக்கலாம் அல்லது நாற்றங்காலில் தயார் செய்துள்ள பயிர்களை 30 x 30 செ.மீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.
நீர் நிர்வாகம்
நடவு செய்த உடன் நீர் பாய்ச்ச வேண்டும். பயிர் நன்கு வளரும் வரை நான்கு அல்லது ஆறு நாட்கள் இடைவெளியில் நீர் பாய்ச்ச வேண்டும். பிறகு பயிரின் தேவைக்கு ஏற்ப பாசனம் செய்ய வேண்டும்.
உரங்கள்
ஒரு எக்டருக்கு தழைச்சத்து 100 கிகி, மணிச்சத்து 60 கிகி மற்றும் சாம்பல் சத்து 60 கிகி கொடுக்கக்கூடிய உரங்களை இட வேண்டும். இதையே இரண்டாக பிரித்து, இருமுறை கொடுக்கலாம்.
பாதுகாப்பு முறைகள்
களை நிர்வாகம்
பயிரின் வளர்ச்சிக்கு களைகள் இடையூராக இருப்பதால் களையெடுத்தல் அவசியமாகும். நடவு செய்த 15-20 நாட்களுக்குள் களை எடுத்து களைகளை கட்டுப்படுத்த வேண்டும்.
பயிர் பாதுகாப்பு
இது இயற்கையாகவே அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதால் பொதுவாக எந்த நோய்களும் தாக்குவது இல்லை. நீர் பாய்ச்சும் போது அமிர்தகரைசல், பஞ்சகாவ்யா ஆகியவற்றை கலந்து நீர் பாய்ச்சினால் கீரை வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
அறுவடை
15 நாட்கள் இடைவெளியில் வளரும் கிளைகளிலிருந்து வெளிப்புற இலைகளை அறுவடை செய்ய வேண்டும்.
அறுவடை செய்யும் பொழுது முழுவதுமாக அறுவடை செய்யாமல் சிறிது பயிரை நிலத்தில் விட்டு அறுவடை செய்ய வேண்டும். அப்போதுதான் அது மறுபடியும் வளரும்.
மகசூல்
ஒரு எக்டருக்கு 5500 கிகி கீரை மற்றும் 2000கிகி உலர் மூலிகை கிடைக்கும்.
பயன்கள்
- இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து A, C மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன.
- வல்லாரை கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஞாபக சக்தி அதிகரிப்பதுடன், மூளை நரம்புகள் வலுப்பெறும்.
- வீக்கம், கட்டிகள் மறைய வல்லாரை இலையை விளக்கெண்ணெயில் வதக்கி வீக்கம், கட்டி ஆகியவற்றின் மீது கட்டிவர விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
- வல்லாரை இலையை வாயில் போட்டு மென்று விழுங்கினால் குடல் புண், குடல் நோய், வாய்ப்புண், வாய் நாற்றம் ஆகியவை அகலும்.
- இக்கீரையானது தொண்டைக்கட்டுதல், காய்ச்சல் மற்றும் சளி ஆகியவற்றை குணப்படுத்த உதவுகிறது.
- உடற்சோர்வு, பல்நோய்கள் மற்றும் படை போன்ற தோல் நோய்களை வேரறுக்கும் வல்லமைக் கொண்டது இந்த வல்லாரை.
1 Reviews
cialis long term effects
https://newfasttadalafil.com/ - Cialis Qngyaa Venta Cialis Generico Cialis Obbzin Cialis Kaufen 10mg https://newfasttadalafil.com/ - Cialis Znggsz Priligy Wirkt Nicht