பாலக்கீரை சாகுபடி முறை மற்றும் பயன்கள்

பாலக்கீரை ஒரு கீரை வகையைச் சேர்ந்த மூலிகைச்செடியாகும்.

இக்கீரையின் தாயகம் ஐரோப்பாவாகும்.

பின் வட ஆப்ரிக்கா, ஆசியா, இந்தியா போன்ற நாடுகளுக்குப் பரவியது.

தென் ஐரோப்பாவில் இதன் வேரிலிருந்து சர்க்கரை எடுக்கிறார்கள்.

ஸ்பெயின் நாட்டில் பாலக்கீரையை அதிகம் சாகுபடி செய்கிறார்கள்.

இது வீட்டில் வளர்க்க ஏற்ற கீரையாகும்.

உரங்கள்

ஜீவாமிர்தக் கரைசலை பாசன நீரில் கலந்து விடவேண்டும். இதனால் நோய் தாக்குதல் குறைந்து கீரைகளின் வளர்ச்சி சீராக இருக்கும்.

பாதுகாப்பு முறைகள்

களை நிர்வாகம்

ஒரு வார காலத்தில் விதைகள் முளைக்க ஆரம்பிக்கும். 10 – 15 நாட்கள் கழித்து களை எடுக்க வேண்டும். பின்னர் களைகள் அதிகம் வளராதபடி களைகளை கட்டுப்படுத்த வேண்டும். முதல் களை எடுக்கும் பொழுது பயிரின் எண்ணிக்கையைப் பொறுத்து பயிர் களைதல் வேண்டும்.

பயிர் பாதுகாப்பு

இக்கீரைகளில் பூச்சிகளைச் சமாளிக்க நொச்சி, பிரண்டை, சோற்றுக்கற்றாழை ஆகிய மூன்றையும் சமமாக எடுத்து அரைத்து, ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீரில் கலந்து ஒரு நாள் வைத்திருக்க வேண்டும். அதனை 10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி கரைசல் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

அறுவடை

30 வது நாளிலிருந்து இலைகளை வெளிப்பக்கத்திலிருந்து வெட்டி உபயோகப்படுத்தலாம். 6-8 முறை அறுவடை செய்யலாம். இலைகளை பூ விடும் முன்பு பறித்து விட வேண்டும்.

பயன்கள்
  • வைட்டமின் A அதிக அளவில் உள்ளதால் மாலைக்கண் மற்றும் கண்களில் அரிப்பு ஏற்படுதல் போன்றவற்றை வராமல் தடுக்க உதவுகிறது.
  • இதில் இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின், போலிக் அமிலம், கால்சியம் போன்றவை இதில் அடங்கியுள்ளன.
  • போலிக் அமிலம் அதிகளவில் உள்ளதால் கர்பிணிகள் இதனை அதிகம் எடுத்துக் கொண்டால் நல்லது மற்றும் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்களும் இதனை சாப்பிட்டால் பால் அதிகம் சுரக்க உதவுகிறது.
  • மெக்னீசியம், காப்பர் மற்றும் வைட்டமின் கே அதிகளவில் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாக உதவுகிறது.
  • இக்கீரை இரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்வதால் அனிமீயா நோய் வராமல் இருக்க உதவுகிறது.
  • இதன் சாற்றை வடிகட்டி 3 துளி காதில் விட்டால் காதில் இரைச்சல் இருப்பதைக் குணப்படுத்தும்.

321 Reviews

Immodolof
1

do they make generic cialis

Centre National de la Recherche Scientifique, Laboratoire d analyse et d architecture des systГЁmes, Toulouse, France K cialis coupons BLIS subtype

Write a Review

Read Previous

சௌ சௌ சாகுபடி முறை மற்றும் பயன்கள்

Read Next

வல்லாரை சாகுபடி முறை மற்றும் பயன்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *